அரசு சார்பில் இலவச ஐஏஎஸ் பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் - அமைச்சர் அறிவிப்பு.!

5shares

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகள் சமூகத்தில் மதிப்பினுக்கு உரிய ஒன்றாகவும், மக்களுக்கான சேவை செய்திடக்கூடிய பணியாகவும் உள்ள காரணத்தினால் குடிமைப்பணிகள் இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் கனவாகவே எப்போதும் இருந்து வருகிறது.

அதே சமயம், குடிமைப்பணி தேர்வுகளுக்காக தயாராவது ஒன்றும் அத்துணை எளிது அல்ல. அதற்கு தேவையான புத்தகங்கள் துவங்கி அதிகப்படியான உழைப்பினையும் செலுத்த வேண்டியது அவசியம். சாமானிய குடும்பங்களுக்கு ஐஏஎஸ் பணிகளுக்கான தயாரிப்பு முயற்சிகள் எப்போதும் கடினம்தான் காரணம் வறுமைச்சூழல். தனியாக தேர்வுகளுக்கு தயார் செய்வதனை விடவும், பயிற்சி நிலையங்களின் வழியே தேர்வுக்கு தயாராகுதல் ஆக்கபூர்வமான வழியும் கூட. ஆனால், தற்போது ஐஏஎஸ் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி நிலையங்கள் லட்சங்களில் தங்கள் கட்டணங்களை நிர்ணயிக்கின்றன.

இந்த நிலையில், நேற்று சட்டப்பேரவையில் விவாதத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் அரசு சார்பில் இலவச ஐஏஎஸ் அகாடமி தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், 32 மாவட்டங்களில் உள்ள மாவட்ட நிலங்கங்களில் ஒரு மாதத்திற்குள் இலவச ஐஏஎஸ் அகாடமி தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?