இலுமினாட்டி புகழ் பாரிசாலன் மீது தாக்குதல்

1130shares

இல்லுமினாட்டிகள் குறித்து அவ்வப்போது யூட்யூப் சேனல்களுக்கு பகீர் பேட்டிகளை அளித்து வருபவர் பாரிசாலன்

தமிழர்கள் வீழ்ந்தது திராவிடத்தால் தான் எனவும், பெரியார் தமிழர்களுக்கு எதிரானவர் எனவும் விமர்சித்துவரக்கூடியவர்.

பாரி சாலன் தனது பஜாஜ் இரு சக்கர வாகனத்தை வேலூரில் உள்ள சர்வீஸ் செண்டரில் சர்வேசுக்காக விட்டுள்ளார். வாகனம் பழுது பார்த்ததற்கு ரூ. 7000 கட்டணம் என தெரிவிக்கப்பட்ட நிலையில்இ அங்கு வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும், அந்த நிறுவனத்தினரை அவர் தெலுங்கர்கள் என்று திட்டியதாகவும் தெரியவருகின்றது.

அங்கு பணியாற்றிய பெண்களிடம் கொச்சையான மொழியில் பேசி கலாட்டா செய்ததாக பஜாஜ் நிறுவனத்தினர் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்கள்.

இதன் காரணமாக உண்டான வாக்குவாதத்தில் பாரிசாலன் கடுமையாகத் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலில் அவர் வாய் உடைந்து ரத்தம் வழிய தனது முகநூல் பக்கத்தில் ஓர் நேரலை வீடியோவில் பேசியுள்ளார். அதில் வேற்று இனத்தை சேர்ந்த நபர்கள் தமிழனை தாக்கி விட்டதாக தனது தனிப்பட்ட பிரச்சனையை இன கலவரமாக முயற்சித்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் அவர் மீது குற்றம்சுமத்தப்படுகின்றது.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?