நீட் தேர்வால் தொடரும் மரணங்கள் ; திருச்சி மாணவி தற்கொலை.!

14shares

நாடு முழுக்க ஒற்றைக் கல்வி முறை இல்லாத போது, மருத்துவ படிப்புகளுக்காக ஒற்றை நுழைவுத்தேர்வு முறைமையினை அமல்படுத்துவது ஏழை - எளிய மாணவர்களின் மருத்துவம் கற்கும் கனவினை மறைமுகமாக சிதைக்கும் செயல் என தொடர்ச்சியாக சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் நீட் தேர்வுக்கு எதிராக குரலெழுப்பிவருகிற போதிலும் அதுகுறித்தெல்லாம் எத்தகைய கவலையும் கொள்ளாமல் நீட் நுழைவுத்தேர்வினை காட்டாயமாக்கி நடத்திவருகிறது மத்திய பாஜக அரசு. அவ்வாறு நடத்தப்படும் நீட் தேர்விலும் பல்வேறு குளறுபடிகள் அரங்கேறிவருகின்றன.

இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வெளியானது நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள். இதில் தமிழகத்தினை சேர்ந்த சுமார் 60 % மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.

நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தினால் தனது மருத்துவ கனவு சிதைந்து போனதாக எண்ணி திருச்சி மாணவி சுபஸ்ரீ என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார்.

முன்னதாக, நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தினால் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி சில தினங்களுக்கு முன்னதாக தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?