மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதர் காலமானார்

7shares
Image

மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், பிரபல எழுத்தாளரும், கலைஞருமான மக்கள் காதர் என அழைக்கப்படும் எம்.ஏ.காதர் தனது 75 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காலமாகியுள்ளார்.

மூத்த ஊடகவியலாளரான மக்கள் காதர் மன்னார் மாவட்டத்திற்கு பல்வேறு வகையிலும் பல்வேறு சேவைகளை மேற்கொண்டவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

குறிப்பாக யுத்த காலங்களிலும் நெருக்கடிகளிலும் தளராது தனது மரணம் வரை தனது ஊடகப்பணியினை ஆற்றியிருந்த மக்கள் காதர் தமிழ் ஊடகப்பரப்பில் என்றுமே நினைவுகூரப்படவேண்டிய ஒருவராக காணப்படுகின்றார்.

குறிப்பாக நெருக்கடிகளை அதிகம் எதிர்கொண்ட மன்னார் மாவட்டத்தில் ஊடகவியலாளர்களது பணி உயிரை பணயம் வைக்கும் ஒன்றாகவே இருந்துவந்திருந்தது.

அவ்வகையில் நின்று நிலைத்து ஊடகப்பணியாற்றிய மிகக்குறைவான ஊடகவியலாளர்களுள் மக்கள் காதரும் ஒருவராக இருந்திருந்தார்.

அத்துடன் புதிதாக ஊடகத்துறையில் கால் பதிக்கவிரும்பும் இளம் சமூகத்தினரிற்கு மக்கள் காதர் நிச்சயமாக நல்லதொரு முன்மாதிரியாகவும் இருந்துவந்திருந்தார்.

தனது வயோதிபத்தின் போதும் ஒதுங்கியிராது ஊடகத்துறையுடன் இணைந்து பணியாற்றிய அவர் இயலாமையின் மத்தியிலும் ஊடகத்துறை சார்ந்து பயணிப்பதில் காட்டிய ஆர்வம் நல்லதொரு முன்மாதிரியாக அமைந்திருந்தது.

அவரது ஜனாசா நல்லடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் மூர்வீதியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தவர்களிற்கும் மன்னார் ஊடக நண்பர்களிற்கும் யாழ்.ஊடக அமையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?