படுகொலை செய்யப்பட்ட 600 பொலிஸாரின் நினைவேந்தல் நிகழ்வுகள் திருக்கோவிலில் ஏற்பாடு

39shares

அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த 1990 ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 600 பொலிசாரின் நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருக்கோவில் ரூபஸ் குளத்திற்கு அருகாமையில் நாளை காலை 09.00 மணிக்கு பொலிசாருக்கான ஆத்மசாந்தி வேண்டிய விசேட வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந் நினைவேந்தல் நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் பூஜீத ஜெயசுந்தர பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளதுடன் மாகாணஇ மாவட்ட மற்றும் பிரதேச பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இங்கு படுகொலை செய்யப்பட்ட தமிழ்இசிங்கள மற்றும் முஸ்லிம் பொலிசார்களின் நினைவாக விசேட நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு தீபச் சுடர்கள் ஏற்றி வைக்கப்படவுள்ளதுடன் படுகொலை செய்யப்பட்ட பொலிசாருக்கான அணிவகுப்பு அஞ்சலியும் இடபெற்று அன்னதான நிகழ்வும் இடம்பெற்றவுள்ளதாக எற்பாட்டு பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவ் படுகொலையானது 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11திகதி இடம்பெற்றிருந்ததுடன் மாவனல்லை மற்றும் அம்பாறை பிரதேசத்தினைச் சேர்ந்த இரண்டு பொலிசார் உயிர் தப்பிச் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?