தமிழர் தாயகத்தை பிரதிபலிக்கும் மற்றுமோர் பிரமாண்டம்!

72shares

யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமான கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. திராவிடர் கட்டிடக் கலைப் பண்பாட்டைப் பின்பற்றி அதி உயர வரவேற்புக் கோபுரம் ஒன்று கடந்த திங்கட்கிழமை வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு கண்ணகைபுரத்தில், கண்ணகையம்மன் என்றழைக்கப்படுகின்ற ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆலயத்திற்குச் செல்கின்ற பக்தர்கள், யாத்திரிகர்களை உள்ளிட்ட அனைவரையும் வரவேற்கும் நோக்கத்தில் 47 அடி உயரம் கொண்டதாக இந்த வரவேற்புக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

வீதியின் குறுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்தக் கோபுரம் 95 அடி நீளத்தையும் 27 அடி அகலத்தையும் கொண்டதாகப் பண்டைய அரசர் காலத்து கட்டிடங்களை நினைவுபடுத்தும் வகையில் காணப்படுவது இதன் விசேட அம்சங்களில் ஒன்றாகும்.

புங்குடுதீவு கண்ணகைபுரம் கண்ணகை அம்மன் என்றழைக்கப்படுகின்ற ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலய பிரதம குருக்கள் பிரதிஸ்டாரட்ன மதுசூதன குருக்களின் தலைமையில் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் செல்லையா யுகேந்திரன், மங்கள வாத்தியங்கள் முழங்க இந்த கோபுரத்தை நாடாவெட்டி திறந்து வைத்தார்.

இந்தக் கோபுரத்தின் நிர்மாணப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கிய முத்துக்குமாரு கிருபானந்தன் குடும்பத்தினர் நினைவுப் படிகக்கல்லைத் திரைநீக்கம் செய்து வைத்தனர். இந்தக் கட்டிடத்திற்கான வடிவமைப்பை தெருமூடி மடம் என்ற தமிழரின் புராதன வரவேற்புக் கோபுர அமைப்பை ஆதாரமாகக் கொண்டு நவீன தேவைகளை உள்ளடக்கி இந்த வரவேற்புக் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. என இந்த கட்டிடத்தை வடிவமைத்த கட்டிட கலை நிபுணர் கரிகரன் தாமோதரம்பிள்ளை குறிப்பிட்டார்.

இந்தக் கட்டிடத்தின் இரு பக்கங்களிலும் 100 பேர் இருந்து களைப்பாறிச் செல்லத் தக்க அமைப்பும் உருவாக்கப்பட்டிருக்கின்றது.தங்கக் கலசங்களைக் கொண்ட முடிகள் அடங்கிய மேற்பகுதியில் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன், கண்ணகை அம்மன், ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆகிய தெய்வச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

எமது கட்டிடக்கலை கலாசாரத்தையும் ஆன்மீகம் சார்ந்த கலை கலாசார நுணுக்கங்களின் முக்கியத்துவம், அவற்றின் பெறுமதிகளை இளந்தலைமுறையினருக்கு எடுத்தியம்புவது இந்த வரவேற்புக் கோபுரத்தின் முக்கிய நோக்கமாகும் என தெரிவித்த கட்டிடக் கலைஞர் ஹரிஹரன் இலங்கையிலேயே இதுவே இத்தகைய வடிவத்திலான ஒரேயொரு பிரமாண்டமான கட்டிட அமைப்பாகும் என்றும் கூறினார்.

இதையும் தவறாமல் படிங்க
பெரும்பான்மை இல்லாத நிலையில் எதற்காக அரசாங்கத்தில் இருக்க வேண்டும்; மஹிந்தவின் சகா அதிரடி!

பெரும்பான்மை இல்லாத நிலையில் எதற்காக அரசாங்கத்தில் இருக்க வேண்டும்; மஹிந்தவின் சகா அதிரடி!

முல்லைத்தீவில் அரங்கேறிய கொடூரம்! எதுவும் அறியாத 5 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

முல்லைத்தீவில் அரங்கேறிய கொடூரம்! எதுவும் அறியாத 5 வயது சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாபம்!!!

அரசாங்கத்தை அமைக்க வழிவிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கண்ணீருடன் கோரிக்கை!

அரசாங்கத்தை அமைக்க வழிவிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கண்ணீருடன் கோரிக்கை!