பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாய் பிரதேச மக்களால் அடக்கம்!

21shares
Image

பெற்ற மகளினால் மகளால் கைவிடப்பட்ட தாயொருவரின் சடலம் பிரதேச மக்களால் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் நுவரெலியா பொகவந்தலாவையில் பதிவாகியுள்ளது.

திருமணம் முடித்து வைத்த பின்னர் மகளும் மருமகனும் தாய் மற்றும் தந்தையை பேருந்து தரிப்பிடத்தில் அனாதரவாக கைவிட்டு சென்றதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா பொகவந்தலாவ - கொட்டியாகலை என்.சி பெருந்தோட்டத்தில் வீரய்யா வல்லியம்மா தம்பதிகள் கூடாரம் ஒன்றில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இவர்களின் மகள் திருமணம் முடித்த நிலையில் பெற்றோரிடமிருந்த பணத்தினை பெற்றுக்கொண்டு விட்டு மகளும் மருமகனும் குறித்த இருவரையும் பொகவந்தலாவ பேருந்து தரிப்பிடத்தில் கைவிட்டு சென்றுள்ளனர்.

இவர்களை இனங்கண்ட கொட்டியாகலை என்.சி.தோட்டமக்கள் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்ததுடன் தோட்டத்திற்கு அழைத்து சென்று தோட்ட நிர்வாகத்தின் உதவியுடன் கூடாரம் அமைத்து பாதுகாத்து வந்ததாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

வல்லியம்மாவின் கணவர் வாதநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கணவரின் அனைத்து வேலைகளையும் அவரே செய்து வந்துள்ளார்.

சுமார் ஒரு வருடகாலமாக அனாதரவாக கைவிடப்பட்ட இவர்களை அவர்களின் உறவினர்களோ மகளோ எவ்வித உதவி கரமும் நீட்டவில்லையென பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த வல்லியம்மா இன்று வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

தாய் உயிரிழந்த செய்தியை பொலிஸார் தொலைபேசி ஊடாக வல்லியம்மாவின் மகளுக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கப்பட்ட போது, தான் கொழும்பில் இருப்பதாகவும் தன்னால் வர முடியாது எனவும் குறிப்பிட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

எனினும், வல்லியம்மாவின் இறுதி கிரியைகளை பொகவந்தலாவ என்.சி.தோட்டமக்கள் பொறுப்பேற்று நடத்தியுள்ளனர்.

வல்லியம்மாவிற்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எந்த பெற்றோருக்கும் ஏற்படக் கூடாது என தோட்ட மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?