காலா திரைப்படம் ரஜினிக்கு பொருத்தமற்றது; சிங்கள அரசியல்வாதிக்கும் தெரிந்து விட்டது!

86shares

காலா படம் ரஜினிக்கு பொருத்தமில்லாத ஒன்று என இலங்கையின் முக்கிய அரசியல் பிரமுகரும், நடிகருமான ரஞ்சன் ராமனாயக்க விமர்ச்சித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த காலா படம் பல இடங்களில் வெளியாகிய நிலையில் ஓரளவாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இத்திரைப்படத்தில் அவர் தனது சொந்த வாழ்க்கைக்கு நேரெதிரான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றார், இதனால் உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள், தரையில் ஒன்று திரையில் ஒன்று பேசிவருவதாக கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தை பார்த்த இலங்கையை சேர்ந்த சிங்கள மொழி நடிகர் ரஞ்சன் ராமனாயக்க கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்.,

நான் ரஜினியின் தீவிர ரசிகன். எனக்கு இப்படம் மிகவும் ஏமாற்றமாக அமைந்தது, ரஜினி ஏன் இந்த மாதிரி படத்தில் நடித்தார்? இது அவருக்கு பொருத்தமில்லாத ஒன்று.

ஷங்கர், ராஜமௌலி போன்ற பிரமாண்ட இயக்குனர்களுடன் இணைவது தான் அவருக்கு அழகு. இனி காலா பட இயக்குனர் ரஞ்சித் படங்களில் நடிக்காதீர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

புதூர் நாகதம்பிரான் ஆலயத்தில் திடீரென தோன்றிய அதிசயம்; மக்கள் மெய்சிலிர்ப்பு!

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

முள்ளிவாய்கால் நினைவேந்தலும் பாவப்பட்ட பணமும்

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?

சிறிலங்கா ராணுவத்தை கட்டி அணைத்து கதறும் தமிழ் மக்கள்!! காரணம் யார்?